தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12ம் தேதி வரை நீட்டிப்பு : முழுவிபரம் இதோ..!!!

2 July 2021, 9:38 pm
Pondy Lockdown- Updatenews360
Quick Share

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள, கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 29.6.2021 அன்று அறிவித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 5-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள போதிலும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 5-7-2021 முதல் 12-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

எவற்றிக்கெல்லாம் தடை நீட்டிப்பு?

மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

திரையரங்குகள்

அனைத்து மதுக்கூடங்கள்

நீச்சல் குளங்கள்

பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

உயிரியல் பூங்காக்கள்

நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிப்பு:-

ஹோட்டல்களில் அமர்ந்து உண்ண அனுமதி

ஹோட்டல்களில் 50% அளவிற்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

டீக்கடைகளில் தேநீர் அருந்த அனுமதி

தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி

50% வாடிக்கையாளர்கள் தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி

மதுக்கடைகள் அனுமதி தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்க அனுமதி

ஏற்கனவே 27 மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது
பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி

தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி

மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு அனுமதி

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி

பொதுப்போக்குவரத்துக்கான பேருந்துகளில் குளிர்சாதன வசதிக்கு அனுமதி கிடையாது

இ.பதிவு நடைமுறை ரத்து

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க நடைமுறையில் இருந்த இ.பதிவு முறை ரத்து

உணவகங்களுக்கு கட்டுப்பாடு

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி

உணவகங்கள், பேக்கரிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி

கிளப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி

ஜிம், உணவகம், விளையாட்டு வசதிகளுடன் கிளப்புகள் செயல்பட அனுமதி

ஐ.டி நிறுவனங்களுக்கு அனுமதி

ஐ.டி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி

ஹோட்டல்கள், லாட்ஜூகளுக்கு அனுமதி

ஹோட்டல்கள், லாட்ஜூகள், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவை செயல்பட அனுமதி

தங்கும் விடுதிகளில் உள்ள உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி

கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகள், இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

நகை & துணிக்கடைகளுக்கு அனுமதி

தமிழ்நாடு முழுவதும் நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

தமிழ்நாடு முழுவதும் அனைத்து துணிக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

வழிப்பாட்டுத் தலங்களுக்கு அனுமதி

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் செயல்பட அனுமதி

குடமுழுக்கு & திருவிழாவுக்கு அனுமதியில்லை

தமிழ்நாடு முழுவதும் குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி கிடையாது

மால்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி

தமிழ்நாடு முழுவதும் மால்கள் எனப்படும் வணிக வளாகங்கள் செயல்பட கட்டுப்பாடுகளுடன் அனுமதி

மால்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

மால்களில் உள்ள தியேட்டர்கள், விளையாட்டு கூடங்களை திறக்க அனுமதி கிடையாது

மால்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி

ஜிம் உள்ளிட்ட உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி

ஜிம், யோகா சென்டர்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

தீம் பார்க்குகளுக்கு அனுமதி

கேளிக்கை, பொழுதுப்போக்கு பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

கேளிக்கை, பொழுதுப்போக்கு பூங்காக்களில் தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி கிடையாது

கேளிக்கை, பொழுதுப்போக்கு பூங்காக்களில் திறந்தவெளி விளையாட்டுகளுக்கு அனுமதி*

Views: - 129

0

0