பிரதமர் குறித்து போலி புகைப்படம்… வசமாக மாட்டிய காங்., மூத்த தலைவர் : ஆதாரத்தை காட்டி அண்ணாமலை காட்டம்…!!

Author: Babu Lakshmanan
30 September 2021, 12:54 pm
modi photo - updatenews360
Quick Share

பிரதமர் மோடி குறித்த போலி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து காங்கிரஸ் நிர்வாகியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி ஆய்வு

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடித்த கையோடு, டெல்லியில் உருவாகி வரும் பிரமாண்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். என்ஜினியர்கள் தலையில் அணியும் தலைக்கவுசம் அணிந்து, இரவு நேரத்தில் அவர் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து பிரதமராக பதவியேற்றதில் இருந்து விடுமுறையே எடுக்காதவர், நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர் என்று பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் புகழ்ந்து வந்தனர். அதேவேளையில், பிரதமர் மோடி ஒரு புகைப்பட விரும்பி என்பதால், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்து விளம்பரம் தேடிக் கொள்வதாக எதிர்கட்சியினர் விமர்சித்து வந்துள்ளனர்.

வசமாக சிக்கிய அல்போன்ஸ்

இதனிடையே, நாடாளுமன்ற கட்டிடத்தை பார்க்கும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சில விஷமிகள் சமூக வலைதளங்களில் உலா விட்டுள்ளனர். அதாவது, பிரதமர் மோடி நின்று கொண்டிருக்கும் போது, அவருக்கு எதிராக ஒரு புகைப்பட கலைஞர் படுத்தவாறு புகைப்படம் எடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வைரலாக்கி உள்ளனர்.

ஆனால், இது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் என்பதை அறியாமல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பகிர்ந்து, தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவரும், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவுமான பீட்டர் அல்போன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்துடன், “சொல்வதற்கு ஒன்றுமில்லை.நமக்கு தகுதியான அரசே நமக்கு கிடைக்கும்!,” என்ற கருத்தையும் பகிர்ந்துள்ளார்.

போலியான புகைப்படம் என்பதை அறியாமல், அரசு பொறுப்பில் இருக்கும் நபர் இதுபோன்று செய்யலாமா..? என்று பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கமெண்ட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

வெட்கக்கேடானது

இந்த நிலையில், பீட்டர் அல்போன்ஸின் இந்த செயலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “அண்ணா, தமிழக அரசுக்கு கைப்பொம்மையாக நடிப்பதற்கு நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும். டுவிட்டரில் நீங்கள் பொய்களை பதிவிட்டு வருவது கேவலமானது. தொடர்ந்து போலியான செய்திகளை போடும் உங்களால், பிரதமர் மோடிக்கு ஆதரவாக திரளும் கூட்டத்தை தடுக்க முடியாது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தவே முடியாது

அண்ணாமலையின் இந்தக் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பீட்டர் அல்போன்ஸின் செயலை விமர்சித்து நெட்டிசன்கள் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “காங்கிரஸ் மற்றும் திமுக வில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திருந்தப் போவதே கிடையாது, *** நாய் *** வாலை நிமிர்த்த முடியாது , அதுபோல இவர்களைத் திருத்த முடியாது. சுருக்கமாகச் சொன்னால் இவர்கள் இழி பிறவிகள் நயவஞ்சக தேச துரோகிகள்,” என விமர்சித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மை தன்மையை ஆராயாமல், ஒரு அரசியல் தலைவர் இதுபோன்று பதிவுகளை போடலாமா..? என்றும் பாஜகவினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Views: - 399

1

0