ஆடிய ஆட்டம் என்ன…!! போலீசின் காலில் விழந்து கதறிய யூடியூபர் மதன் : அல்லேக்காக அள்ளிய போலீசார்..!!

18 June 2021, 10:52 am
youtube madhan - updatenews360
Quick Share

பெண்களை குறிவைத்து ஆன்லைன் விளையாட்டில் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல யூடியூபர் மதனை போலீசார் கைது செய்தனர்.

பெண்களை தனது ஆபாச சேட்டிங்கால் கவர்ந்து, இச்சைகளை தீர்த்துக் கொண்டதாக எழுந்த புகாரால் யூடியூபர் மதன் என்பவன் போலீசாரின் பார்வையில் சிக்கியுள்ளான். பப்ஜியை யூடியூபில் ஸ்டீரிம் செய்து பெண்களுடன் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரச் செய்து நிர்வாண புகைப்படங்களையும், வீடியோ கால்களையும் செய்து பலரின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், பேடிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வழிகளில் ஆயிரக்கணக்கிலான ரூபாயை சம்பாதித்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

யூ டியூப் மதன் ஆன்லைன் விளையாட்டின் போது கெட்ட வார்த்தை பேசிய வீடியோக்கள், பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோக்கள், மற்ற பெண்களுடன் தனியாக ஆபாசமாக பேசிய வீடியோக்கள் என அனைத்தும் தற்பொழுது சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், நேரில் ஆஜராகுமாறு போலீசார் மதனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், ஆஜராகாமல் தலைமறைவான மதன், இந்தியாவிலேயே அதிக பணம் கொட்டும் சேனலை நடத்தும் எனக்கு எப்படி சட்ட நடவடிக்கைளை எதிர்கொள்ள வேண்டும் என தெரியும் என்று திமிராக பேசினார்.

இதனிடையே, மதன் நடத்தும் யூடியூப் சேனலின் அட்மினாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இத்தனை நாட்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த மதனை போலீசார் இன்று தருமபுரியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது, தான் செய்தது என்றுக் கூறி போலீசாரின் காலில் விழுந்து மதன் கதறியுள்ளார். இருப்பினும், 120க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளதால், போலீசார் அவரை விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை காவலில் எடுத்து, புகார்கள் தொடர்பாக விசாரிக்க உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 209

0

0