உதயநிதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார் : பிரபல பெண் மருத்துவர் விளாசல்..!! (வீடியோ)

21 January 2021, 2:09 pm
udhayanidhi - updatenews360
Quick Share

சென்னை : திமுக இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசி வருவதாக பிரபல மனநல மருத்துவர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தந்தை ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் நாகரீகமற்ற வார்த்தைகளை பேசி வருகின்றனர்.

அண்மையில், சசிகலா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி குறித்து அருவருக்கத்தக்க வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெண்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பெண்ணை ஆபாசமாக பேசிய உதயநிதி ஸ்டாலின் குறித்து பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவரது இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Courtesy : Nakkeeran

அவர் பேசியிருப்பதாவது :- எடப்பாடி என்பது ஓர் ஊர். பழனிசாமி என்பதுதான் அவர் பெயர். எடப்பாடினு ஓர் ஊர் பெயர் இருக்கக் கூடாதா..? அத நீங்க எடுபுடி, டெட்பாடி என எதுகை, மோனையில் பேசினால், மனநலம் குன்றியவர்கள்தான் இப்படி பேசுவார்கள். உங்கள் மனநலம் குன்றியவர்கள் இப்படி மேடையில் வெளிச்சம் போட்டு காட்டுவீங்கனா.. உங்க மனநலம் எப்படி இருக்குனு செக் பண்ணிக்கோங்க.

மனநலத்துறையின் ஒரு ஆய்வில், ஒருவர் மனதில் என்ன நினைக்கிறீங்களோ, அதைத்தான் பேசுவார். ஒருவர் கொச்சையா செக்ஸ் பத்தி அதிகமாக பேசுகிறார் என்றால், அவர் மனதில் செக்ஸ் அதிகமாக இருக்கும். ஒருவர் சாதி பத்தி அதிகமாக பேசினால், அவர் மனதில் சாதி வெறி அதிகம் இருப்பதாக அர்த்தம். ஒருவர் பெண்களை பற்றி கொச்சைப் படுத்தி பேசினால், அவருக்கு அப்படிதா எண்ணங்கள், யோசனை இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு ஆண், ஆட்சியில் இருக்கிற ஒரு முதலமைச்சரை 45 வயதுள்ள ஒரு மனிதர் இப்படி பேசினால், 45 வயதில் பராக் ஒபாமா எப்படி பேசினார். நியாபகம் இருக்குமல்ல. இப்படியெல்லாம் கொச்சையா பேசுறவங்கல நாம கொண்டாடுலயே. ஏன் இப்படி அசிங்கமாக பேசுகிறீர்கள். இது கூட பேசத் தெரியாதவங்ககிட்ட தலைமை பதவியை எப்படி கொடுக்கறது. இந்த பண்பு கூட இல்லாதவர் எப்படி தலைவர் ஆக முடியும். ஒரு விழிப்போட இருந்துதான் அவர்கள புறம் தள்ளி இருக்கிறோம். உதயநிதி ஸ்டாலின ஒரு தலைவரா..? ஏன் ஏற்றுக் கொள்ள முடியல.

இது பரவாயில்லை. அவரோட அப்பா வந்து மாங்காவ விடவே மாட்டிராரு. அவர் பாமக-ல இருக்காரா..? திமுக-ல இருக்காரா..? என்று எனக்கே தெரியல. எப்போ பாரு, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்தது…. ஒரு கல்லுல ரெண்டு மாங்கா, தமிழக மக்கள் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம், என அவர் பேசியுள்ளார்.

Views: - 4

0

0