தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!

Author: Babu Lakshmanan
26 August 2021, 6:50 pm
Quick Share

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ரூ.9,924 கோடிக்கான பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது :- தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவேன் என்பதை உறுதியளிக்கிறேன். புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் வழங்கப்படும்.

ஆடுகள் வாங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். கறவை மாடுகளை பரமாரிக்கவும், கூட்டுறவு வங்கிகளில் இல்லாதவர்களுககு 75% மானியத்தில் தீவனம் தரப்படும்.

புதுச்சேரியில் கல்வித்துறைக்கு ரூ.742.81 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதுச்சேரியில் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள், என தெரிவித்தார்.

Views: - 297

0

0