மீண்டும் பாக்யராஜ்-க்கு அடித்த அதிர்ஷ்டம் : திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தந்தையை வீழ்த்தி வெற்றி…!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 6:44 pm
Bjagyaraj Won - Updatenews360
Quick Share

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் , எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் 2 அணிகள் போட்டியிட்டனர். இந்த நிலையில் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் 192 வாக்குகள் பெற்று பாக்கியராஜ் வெற்றி பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்றார்.

Views: - 114

0

0