முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது..!!

9 May 2021, 8:21 am
Cm stalin - updatenews360
Quick Share

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 7ம் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டது. இந்த புதிய ஆட்சி தொடங்கிய 3ம் நாளான இன்று அவசரமாக அமைச்சரவை கூட்டப்படுகிறது.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். கொரோனா பரவல் கட்டுப்பாடுகள், மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக எழுந்துள்ள அவசர நிலை உள்ளிட்ட அம்சங்களும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

Views: - 163

0

0