அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு : போடியில் ஓபிஎஸ், எடப்பாடியில் ஈபிஎஸ் போட்டி…!!

5 March 2021, 2:11 pm
eps ops - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக தயாராகி வருகிறது. பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்ட அதிமுக, தேமுதிகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், விவரம் பின்வருமாறு :-

தொகுதி – வேட்பாளர்

போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி – எடப்பாடி கே பழனிசாமி

ராயபுரம் – டி. ஜெயக்குமார்

விழுப்புரம் – சி.வி. சண்முகம்

ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி. சண்முகநாதன்

நிலக்கோட்டை (தனி) – தேன்மொழி

Views: - 19

0

0