முதல்ல குறைச்சீங்க, இப்ப மறுபடியும் ஏத்திட்டீங்க : ஆவின் பால் விலை உயர்வு.. புதிய விலை பட்டியலை வெளியிட்ட பால்வளத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2022, 11:13 am
Minister Nassar - Updatenews360
Quick Share

ஆவின் பால் விலை உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் , ஆவீன் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து 05.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 லிருந்து ரூபாய் 35 ஆகவும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 லிருந்து 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோரின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் ( நீல நிறம் பால் பாக்கெட்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் ( பச்சை நிறம் பால் பாக்கெட்) ஆகியவற்றின் விலையில் மாற்றம் இன்றி தற்போதைய நிலையே தொடரும்.

தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கு புதுபிக்கப்படும்.

சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த விலை மாற்றம் உற்ப்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடு செய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகிழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ 24 குறைவு. சில்லறை விலையில் விற்க்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ 10 குறைவு.

உற்பத்தியாளர்காளின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும் சில்லறை விற்பனையாளர்களும் மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Views: - 699

0

0