விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா : மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்!!

8 August 2020, 11:28 am
Dubai
Quick Share

கோழிக்கோடு : கேரளாவில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நேற்று துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிககையாக மீட்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்தது கேரள சுகாதாரத்துறை. அதில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 40 பேருக்கு தொற்று உ றுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே, விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனாவும் சேர்ந்துகொண்டிருப்பது மீளாத்துயரம் எனச் சொல்லப்படுகிறது.