திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் : VPF கட்டணத்தை செலுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு..!!

2 November 2020, 12:44 pm
Bharathiraja- Updatenews360
Quick Share

சென்னை : VPF கட்டணத்தை செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்ம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்‌ இரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்கியவுடன்‌, இனி மேலும்‌ VPF என்‌கிற கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள்‌ சங்கத்தை சேர்ந்த அனைவருக்கும்‌, மற்றும்‌ அனைத்து டிஜிட்டல்‌ ப்ரொஜெக்ஷன்‌ நிறுவனங்களுக்கும்‌ முறையாக கடிதம்‌ அனுப்பி, அதில்‌ 12 வருடங்களுக்கு மேலாக கட்டி வரும்‌ VPF என்ற வாராவாரம்‌ கட்டணத்தை இனிமேல்‌ கொடுக்க முடியாது.

டிஜிட்டல்‌ நிறுவனங்கள்‌ மாஸ்டரிங்‌, குளோனிங்‌, டெலிவரி மற்றும்‌ சேவைக்கான ஒரு முறை கட்டணம்‌ எதுவோ, அதை மட்டுமே இனிமேல்‌ எங்களால்‌ தர முடியும்‌ என்று தெரிவித்து இருந்தோம்‌. திரையரங்கில்‌ உள்ள ப்ரொஜெக்டர்‌ சம்பந்தப்பட்ட லீஸ்‌ தொகையை திரையங்குகள்‌ தான்‌ கட்ட வேண்டும்‌, தயாரிப்பாளர்கள்‌ அல்ல என்பதையும்‌ தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்‌.

அத்தகைய ஒரு One time கட்டண முறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால்‌, திரையரங்குகள்‌ மீண்டும்‌ திறக்கப்பட அனுமதி வந்தாலும்‌, எங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்‌ என்பதையும்‌ குறிப்பிட்டிருந்தோம்‌.

100 பேருக்கும்‌ மேல்‌ நடப்பு தயாரிப்பாளர்கள்‌ இந்த முடிவை எடுத்து தெரிவித்த போதிலும்‌, திரையரங்கு உரிமையாளர்களும்‌, டிஜிட்டல்‌ ப்ரொஜெக்ஷன்‌ நிறுவனங்களும்‌, எங்களின்‌ கோரிக்கைக்கு செவி சாய்க்காமல்‌, நாங்கள்‌ VPF தொடர்ந்து கட்டணத்தை வாங்குவோம்‌ என்று எங்களுக்கு தெரிவித்து உள்ளனர்‌. தயாரிப்பாளர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக்கைகளில்‌ ஒன்றை கூட அவர்கள்‌ ஏற்றுக்‌ கொள்ள முடியாது என்று தெரிவித்து உள்ளதால்‌, நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தை சேர்ந்த அனைத்து தயாரிப்பாளர்களும்‌ ஒருங்‌கிணைந்து, VPF கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும்‌ வரை தங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த VPF கட்டணப்‌ பிரச்சனைக்கு முடிவு எட்டும்‌ வரை, அனைத்து தயாரிப்பாளர்களும்‌, தங்களின்‌ புதிய படங்களின்‌ வெளியீட்டு தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன்‌ கலந்தாலோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டு கொள்கிறோம்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 20

0

0

1 thought on “திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் : VPF கட்டணத்தை செலுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு..!!

Comments are closed.