சமூக செயற்பாட்டாளர் ஷாஹீன் பாக் பில்கிஷ் டாடி கைது

1 December 2020, 11:28 pm
Quick Share

டெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சமூக செயற்பாட்டாளர் ஷாஹீன் பாக் பில்கிஷ் டாடி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால், அரியானா- டெல்லி எல்லைகள், உத்தரபிரதேசம்- டெல்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய குழு தலைவர்களுக்கு மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தீர்வு எட்டப்படவில்லை. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் நடைபெற்ற ஷாஹீன் பாக் போராட்டம் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் மிகவும் பிரபலமானவர் 82 வயது நிரம்பிய சமூகசெயற்பாட்டாளரான மூதாட்டி பில்கிஷ் டாடி. இவர் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக டெல்லியில் அவர் கூறியதாவது:- நாம் விவசாயிகளின் மகள்கள், அவர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டம் நடத்த உள்ளோம். நாம் நமது குரலை உயர்த்துவோம். அரசு நமது பேச்சை கேட்கவேண்டும். இவ்வாறு பில்கிஷ் டாடி கூறினார். மேலும், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது போலீசார் அவரை சிங்கு எல்லையில் சமூக செயற்பாட்டாளர் ஷாஹீன் பாக் பில்கிஷ் டாடி கைது செய்யப்பட்டார். ‘‘தற்போது கொரோனா காலம். பில்கிஷ் டாடிக்கு 82 வயதாகிறது. அவரது பாதுகாப்பு கருதி தடுத்து நிறுத்தப்பட்டார்’’ எனப் போலீசார் தெரிவித்தனர்.

Views: - 15

0

0