வரும் செப்.,30ம் தேதி வரை சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிப்பு

31 August 2020, 4:22 pm
Flight air india 01 updatenews360
Quick Share

டெல்லி : கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஒருபுறம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் எடுத்து வரும் மத்திய அரசு, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, தளர்வுகளையும் அறிவித்து வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் 4ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதியளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்து எந்தவிதமான தகவலும் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், சர்வதேச விமானப் போக்குவரதிற்கான தடை வரும் 30ம் தேதி நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் மத்திய அரசு அனுமதியளித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என்றும், சரக்கு போக்குவரத்து சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‛வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும், எனத் தெரிவித்துள்ளது.

Views: - 7

0

0