‘எடப்பாடியாரின் வழியில் கழகப் பணியா..?’ தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி.யின் பேச்சால் உ.பி.க்கள் ‘கலகல’ (வீடியோ)
18 August 2020, 2:16 pmபொதுமேடைகளினாலும் சரி, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினாலும் சரி…! எப்போதுமே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் பேச்சு சமூகவலைதளங்களுக்கு நல்ல தீணியாகவே இருக்கும். ஏனென்றால், அவர் பேசும் போது, தடுமாற்றங்கள், தவறுகள், பொருட்படாமல் பேசுவது என தனது உரையின் மூலம் அவரே தன்னை கேலிக் கூத்திற்கு ஆளாக்கி கொள்வார்.
உதாரணமாக, ‘பூனை மேல் மதில், 86ம் 9யும் கூட்டினால் 97, யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே’ போன்றவை அவரது உளறல்களில் நகைச்சுவையுடன் கூடியதாக இருந்தாலும், ஒரு அரசியல் தலைவரிடம் இருக்கக் கூடாத பழக்கமாகவே இது உள்ளது.
தி.மு.க.வின் கட்சித் தலைவர்தான் இப்படியென்றால், அவரது கட்சியின் உடன்பிறப்புகளும், ‘தலைவனை போலவே தொண்டன்’ என்பதை உடன்பிறப்புகள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.
அதற்கு சான்றாக, அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. லெட்சுமணின் பேச்சு தான் இன்று சமூக வலைதளங்களை அலங்கரித்து வருகின்றன. தி.மு.க.வில் இணைந்த பிறகும், அவர் அண்ணன் எடப்பாடியாரின் வழியில் செயல்படுவேன் எனக் கூறியது, தி.மு.க.வினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இருப்பினும், மீண்டும் மாண்புமிகு அண்ணன் தளபதியின் வழியில் என மாற்றிக் கூறியிருந்தாலும், பழக்கதோஷம் அவரை விட்டுப் போகவில்லை என்பது அங்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
திமுகவில் சேர்ந்த முதல் நாளிலே நிகழ்ந்த இந்த தவறை, இனி நடக்காமல் பார்த்துக் கொண்டால் போதும் என முன்னாள் எம்.பி. லெட்சுமணனுக்கு உடன்பிறப்புகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதைக் கண்ட நெட்டிசன்கள் ‘சேர்ந்த அன்னைக்கேவா..!, சேர்ந்த இடம் அப்படி’ என்று அந்த முன்னாள் எம்.பி.யை கழுவி ஊற்றி வருகின்றனர்.
0
0