முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவு தினம் : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 10:23 am
Karunanithi CM Stalin Rally - Updatenews360
Quick Share

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து, பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். இந்த அமைதிப்பேரணியில் மூத்த அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.

Views: - 139

0

0