ஜெ., பிறந்த தினமான நாளை அதிமுக விருப்ப மனு விநியோகம் : ஓபிஎஸ், இபிஎஸ் தொடங்கி வைக்கின்றனர்..!!!
23 February 2021, 7:26 pmசென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான நாளை, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 73- ஆவது பிறந்த நாளான 24ம் தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை. அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் ௬ழக வளாகத்தில் அமைந்துள்ள இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி: அம்மா அவர்களின் திருவுருவச் சிலைக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்பும் சழக உடன்பிறப்புகளுக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைக்க உள்ளார்கள்.
ஆகவே, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் நாளை காலை 9 மணிக்கே தலைமைக் கழகத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0