பா.ஜ.க.வில் இணைந்தார் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை..!

25 August 2020, 2:10 pm
annamalai -- updatenews360
Quick Share

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை டெல்லியில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கர்நாடகாவில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி எனப் பெயரெடுத்த திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை, சில மாதங்களுக்கு முன்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, தற்சார்பு விவசாயம், ரஜினி ஆதரவு குறித்து பேசி வந்த நிலையில், தற்போது பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் ரஜினிகாந்தின் முதலமைச்சர் வேட்பாளராக அண்ணாமலை இருப்பார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக அறிவித்தார்.

அதன்படி, டெல்லியில் தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

முன்னதாக, பா.ஜ.க.வில் இணைவது தொடர்பாக பேசிய அவர், “- தேசப் பாதுகாப்பு, நாட்டு நலன் உள்ளிட்ட காரணங்களால் தான், நான் ஐபிஎஸ் பதவியை ஏற்றேன். அதே போன்ற ஒரு மாற்றுப்பாதை தற்போது தமிழகத்தின் தேவையாக உள்ளது. இந்த மாற்றுப்பாதையை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும் என்று நம்புகிறேன். இதன் காரணமாகவே பாஜகவில் இணைகிறேன்,” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 47

0

0