ஓ.பி.எஸ் கட்சியை வீட்டு நீக்கப்படுவாரா..? வெளிப்படையாகவே கருத்தைச் சொன்ன ஜெயக்குமார்..!

Author: Babu Lakshmanan
5 July 2022, 4:26 pm
Quick Share

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் ஜூலை 11 ம் தேதி நடக்கிறது. இதற்கு,போலீஸ் பாதுகாப்பு அளிக்ககோரி முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பென்ஜமின் ஆகியோர், டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசியதாவது :- பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை முழுமையாக பாதுகாப்பு வழங்கவேண்டும். சமூக விரோதிகள் பொதுக்குழு நடைபெறும் இடத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுக்குழுவை தடுக்க ஓ.பி.எஸ்.தரப்பினர் சமூக விரோதிகளை துண்டி விடுவதற்கு வாய்ப்பு உள்ளது‌.

கடந்த ஜூன் 23ம் தேதி போல் அல்லாமல், ஜூலை 11ம் தேதி காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுதொடர்பாக, தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவை நேரடியாக சந்தித்து மனு அளித்தோம். டி.ஜி.பி பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார், எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, ஓ.பி.எஸ் கட்சி விதிகளை மீறி நடப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, அவர் பதிலளித்ததாவது :- கட்சி விதிகளை மீறி செயல்படுவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டனுக்கு ஒரு விதி நிர்வாகிகளுக்கு ஒரு விதி என தனித்தனியாக எதுவும் இல்லை. கட்சி விதிகளை மீறினால் அதிமுக தலைமை முடிவு செய்யும்.

கொரோனா விதிமுறைகளின் படி, பொதுக்குழு நடைபெறும். அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. திருமதி இளவரசி, சசிகலாவின் 150 கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி இருக்கிறது. அதற்கு நழுவின மீன் போல் நழுவினார், என தெரிவித்தார்.

Views: - 120

0

0