தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாக அடிக்கப்படுகிறது : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்..!!!

Author: Babu Lakshmanan
6 September 2021, 3:41 pm
Jayakumar - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாக அடிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்ளிடம் அவர் பேசியதாவது :- நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். பல்வேறு குழப்பங்கள் இருக்கும் நிலையில், தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்று தெரிய வில்லை. வாக்குப்பதிவு நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணியாகவே நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் இல்லை என்பது பற்றி பதில் அளித்த அவர், தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாக அடிக்கப்படுகிறது, என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்தார்.

Views: - 160

0

0