அதிமுக ஒரு இமயமலை…. பரங்கிமலை போன்றவர்கள் விமர்சிப்பதா…? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
11 October 2021, 5:44 pm
Jayakumar - Updatenews360
Quick Share

சென்னை : இமயமலை போன்ற அதிமுகவை, பரங்கிமலை போன்ற கட்சிகள் விமர்சிப்பது இந்த நூற்றாண்டின் நகைச்சுவை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொன்விழா ஆண்டு வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். அதேவேளையில், அதிமுகவினருக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விதமாக, அக்டோபர் 16ம் தேதி ஜெயலலிதா சமாதிக்கும், 17ம் தேதி ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவர் பேசியதாவது :- எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் தழைத்தோங்கும். அவரது காலத்திற்கு பிறகு ஜெயலலிதா எஃகு கோட்டையாக இயக்கத்தை கட்டி காப்பாற்றினார். வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத சிறப்பு அதிமுகவுக்கு உண்டு. 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. 5 முதல்வர்களை தந்துள்ளது.

வெள்ளி விழா ஆண்டை மாநாடு போல நெல்லையில் ஜெயலலிதா நடத்தினார். அதுபோல், பொன் விழா ஆண்டை நடத்த முடிவு செய்துள்ளோம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். புதிய அவைத் தலைவர் குறித் நியமனம் குறித்தும் பேசப்பட்டது.

சசிகலா வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிறையில் இருந்து வந்த போது, ஜெ., நினைவிடத்திற்கு செல்லாதவர், இப்போது ஏன் செல்ல வேண்டும். அரசியல் செய்வதற்காகவே இதனை செய்யவிருக்கிறார். உண்மையான கட்சித் தொண்டர்கள் அதிமுகவை விட்டு வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டார்கள்.

நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சீமான் கூறியதை கேட்கிறீர்கள். அ.தி.மு.க. 1 கோடியே 46 லட்சம் வாக்குகளை பெற்று இமயமலைபோல் உயர்ந்து இருக்கிறது. அதை பரங்கிமலைபோல் தாழ்ந்து இருப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு இணையாக பேசுவது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகும், என்றார்.

Views: - 384

0

0