முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் சோதனை நிறைவு : 34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்ததாக தகவல்

Author: Babu Lakshmanan
16 September 2021, 7:28 pm
Quick Share

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்தது.

கடந்த ஆட்சியின் போது வணிகவரி துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதோடு, சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீரமணியின் உறவினர்கள், அவருக்கு சொந்தமான 28 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

மாலை வரை நீடித்த இந்த சோதனையின் முடிவில் 34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர், மேலும், ரோல்ஸ் ராய்ஸ் உள்பட 9 சொகுசு கார்களும், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணலும் பதுக்கி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 முதல் 2021 வரை 28.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் வாங்கியுள்ளார் கே.சி.வீரமணி எனவும், ரூ.1.83 கோடிக்கு மிகாமல் கே.சி.வீரமணி சொத்து இருந்திருக்க வேண்டும் என முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 125

0

0