முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் ரொக்கம், நகைகள் பறிமுதல் : போலீசார் தகவல்

Author: Babu Lakshmanan
15 December 2021, 6:12 pm
Quick Share

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.37 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதேபோல, ஈரோடு, கோவை, சென்னை, கரூர், சேலம் உள்பட 9 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.16 கோடி ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சோதனையில் 1.13 கிலோ தங்கம், சுமார் 40 கிலோ வெள்ளி, ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Views: - 256

0

0