‘நீ விஷம் குடிச்சாயே, எதுக்காக, யாருக்காக சொல்லட்டுமா..? நாறிப் போய்டும் நாறி’ : உதயநிதிக்கு வளர்மதி பகீரங்க எச்சரிக்கை ..!!

9 January 2021, 2:04 pm
valarmathi - udhayanidhi - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பற்றி முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான வளர்மதி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

அண்மையில் திமுக பிரச்சாரக் கூட்டமொன்றில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சசிகலாவுடன் இணைத்து ஆபாசமாக பேசினார். அவரது இந்தப் பேச்சிற்கு அதுமுக உள்பட பல்வேறு கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உதயநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் வளர்மதி கடுமையாக பேசினார்.

அவர் பேசியதாவது :- எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் ராமாயணப் போர் போன்றது. இதில், எடப்பாடியாரும் – ஓ. பன்னீர்செல்வமும் ராமன்- லட்சுமணன் ஆவார்கள். முக ஸ்டாலினின் பிரச்சாரக் கூட்டம் ராணுவனின் கூட்டமாகும். அன்றே எம்ஜிஆர் சொன்னார், கருணாநிதி ஒரு தீய சக்தி என்று. இந்தத் தேர்தலுடன் திமுகவின் கதையை முடிக்க வேண்டும். பிரச்சாரக் கூட்டத்தில் எல்லாமம் ஊழலாட்சி என்று ஸ்டாலின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர். ஊழலாட்சி என்னும் சொல்லி திரியும் கூட்டமெல்லாம் உத்தமர் காந்தியின் வீட்டு பேரன்களா..? கருணாநிதியின் வீட்டு பிள்ளைகள் தானே. ஊழல் செய்தே பழக்கப்பட்டவர்கள்தான் திமுகவினர். இப்போது எங்களை பற்றி கூறுவது வேடிக்கையாக இருந்து வருகிறது.

admk meeting - updatenews360

கடந்த சில நாட்களாக திமுகவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். எடப்பாடியாரை தரக்குறைவாக பேசினால், நாங்களும் பதிலுக்கு திருப்பி பேசுவோம். நாங்கள் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். எடப்பாடியாரைப் பற்றி பேசும் உதயநிதியே, நீ விஷம் குடித்தாயே, எதற்காக…? யாருக்காக..? சொல்லட்டுமா..? சொன்னால் நாறிப் போய்விடும். உண்மையை சொன்னால், நாடே சிரித்து விடும். எடப்பாடியாரைப் பற்றி பேசினால் நாக்கு அழுகிப் போய்விடும்.

அண்ணன் எடப்பாடியார் தீரன் சின்னமலை என்றால், ஓபிஎஸ் பூலித்தேவன். இருவரும் இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சர் தலைமையில் அதிமுக அரசு அமைய கடுமையாக உழைப்போம். பிஎச் பாண்டியனின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒரே காரில் வந்தது, மருது சகோதர்களைப் போல இருந்தது. இந்தக் காட்சி பலருக்கு வயித்தெறிச்சலை ஏற்படுத்தியது. நாம் ஒற்றுமையாக இருந்து எடப்பாடியாரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும், எனப் பேசினார்.

Views: - 0

0

0