வருமானத்தை மறைத்து மோசடி.. குறுகிய காலத்தில் ரூ.400 கோடி? திமுக பிரமுகரின் SKP நிறுவனம் சிக்கியது எப்படி? பகீர் பின்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2021, 6:57 pm
SKP Finance -Updatenews360
Quick Share

திமுக பிரமுகர் வருமானத்தை மறைத்து சொத்து சேர்த்ததாக ரூ.150 கோடி பறிமுதல் செய்துள்ள சம்பவம் அறிவாலயத்தை அதிர வைத்துள்ளது.

கடந்த 5-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 34 இடங்களில் 3 நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதில் குறிப்பாக, பச்சையப்பாஸ் சில்க், எஸ்கேபி நிதி நிறுவனம், செங்கல்வராயன் சில்க் ஆகிய 3 நிறுவனங்கள் தொடர்பான 34 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், 3 நிறுவனங்களில் தனித்தனியாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், எஸ்கேபி சிட்பண்ட் நிறுவனத்தில் குறுகிய காலத்தில் ரூ.400 கோடி சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எஸ்கேபி நிறுவனம் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக உள்ள எஸ்.கே.பி சீனிவாசனுடையது. மேலும் கணக்கையும் அவர்கள் மறைத்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து கடனாக பெற்றவர்களுடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Image

அதேபோல் கணக்கில் வராத ரூ.1.35 கோடி பணமும், 7.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் 2 துணி கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.44 லட்சம் பணமும், 9.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டு சேலை நிறுவனத்திடம் ரூ.100 கோடியும், நிதி நிறுவனத்திடம் ரூ.150 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த 3 நிறுவனங்களிடம் பறிமுதல் செய்யபட்ட ஆவணங்கள் தொடர்பாக வரும் நாட்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

சுமார் 10 வருடத்திற்கு பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், வருமான வரித்துறையினரின் சோதனையில் திமுக பிரமுகர் சிக்கியுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 449

0

1