ஓசி பயணத்தை விரும்பாத பெண்கள் பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாமா..? அமைச்சர் சிவசங்கர் சொன்ன விளக்கம்…!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 7:32 pm
Quick Share

சென்னை : பேருந்துகளில் இலவச பயணத்தை விரும்பாத பெண்கள், காசு கொடுத்து பயணிக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில், அதற்கு அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி, ” பெண்கள் ஓசி-யில் பயனக்கிறீங்க”; என்று பேசியது சர்ச்சையானது. இதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் என்ற மூதாட்டி ” நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என்று சொல்லி கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்த சம்பவம் பூதாகாரமானது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் சிலர் இலவசமாக பயணிக்க விரும்பாமல் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் வாங்கி பயணித்தனர். மேற்கண்ட சம்பவங்களின் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இச்சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பை வாய்மொழியாக வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. அதில், அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என்று மகளிர் விரும்பினால், பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என்று அனைத்து நடந்துநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

அதில், அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என்று மகளிர் விரும்பினால், பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என்று அனைத்து நடந்துநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில், பெண்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி எனவும், பெண்களின் இலவச பயண பேருந்து திட்டம் தொடரும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ” தமிழகத்தில் இலவச பேருந்து பயணத்திட்டம் தொடரும். இதுவரை 168 கோடி இலவசமாக பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பயன் தரும் இந்த திட்டம் தொடரும். கட்டணம் செலுத்தலாம் என்பது வதந்தி,” எனக் கூறியுள்ளார்.

Views: - 348

0

1