மாணவர்களுக்கு ₹1000 எப்போது முதல் வழங்கப்படும்.. முதலமமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
14 June 2024, 1:28 pm
CM Sta
Quick Share

தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1000 வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பங்கேற்றது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், பேசிய முதலவர் மு.க.ஸ்டாலின், புதுமைப் பெண் திட்டங்களை பல மாணவிகள் பாராட்டினார்கள். அந்த மகிழ்ச்சி மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கொண்டவரப்படவுள்ளது என்றும், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக நான் கலந்துகொள்வேன். ஆனால் என்னைவிட ஆர்வமாக கலந்து கொள்பவர் அமைச்சர் உதயநிதி தான். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன் நான் கலந்து கொள்ள வேண்டிய முதல் விழா இதுவாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸிடம் சொல்லி இருந்தேன்.

பள்ளி மாணவர்களை பார்க்கும் போது எனக்கும் இளமை திரும்புகிறது. மேலும், தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது புதுமைப்பெண் திட்டத்தை பலரும் பாராட்டியதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Views: - 165

0

0