‘இது இறைவனின் கட்டளை… யாராலும் தடுக்க முடியாது’ : முதலமைச்சர் காரின் மீது பழக்கடைக்காரர் வீசிய பேப்பர்..! நெகிழ்ச்சி சம்பவம்..!

31 August 2020, 1:54 pm
edappadi palanisamy car - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பரவல் குறித்து திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, நீடா மங்கலம் வழியாக, அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

நீடாமங்கலம் அண்ணாசிலை அருகே சென்ற போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து முதலமைச்சர் கையசைத்தவாறே, கார் மெதுவாக நகர்ந்தது. அப்போது, முதலமைச்சரின் கார் மீது திடீரென கையால் எழுதிய வாசகம் அடங்கிய நோட்டு பேப்பரை ஒருவர் வீசினார். இதைக் கண்ட முதலமைச்சரின் பாதுகாவலர்கள், அந்த நபரை திட்டியதுடன், அந்த பேப்பரை கையில் எடுத்தனர்.

இதைக் கண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாவலர்களை அழைத்து, பொதுமக்களிடம் இதுபோன்று நடந்துக் கொள்ளக் கூடாது எனக் கூறியதுடன், அந்தப் பேப்பரை வாங்கிப் படித்தார்.

அதில், ‘தமிழ் கடவுள் பழனி முருகன் பெயருடைய பழனிசாமி ஆகிய தாங்கள்தான், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் முதலமைச்சர். இது இறைவனின் கட்டளை,’ எனக் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி, பேப்பரை வீசிய நபரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, பூங்கொடுத்து கொடுத்து, அந்த நபருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

இது குறித்து பேப்பரை வீசிய பழக்கடை காரர் செல்வராஜ் பேசுகையில், ” நான் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவன். முச்சந்தி மாரியம்மனின் அருளால், என் மனதில் இறைவனால் ஏற்பட்ட கருத்தை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். எடப்பாடி பழனிசாமி ஐயா, அவர்கள் மீண்டும் முதலமைச்சராவது இறைவனின் அருள். இதைய எவராலும் தடுக்க முடியாது. சாதாரண தொண்டனான என்னையும், முதலமைச்சர் மதித்த நிகழ்வு என்னை சிலிர்க்க வைத்துள்ளது, ” எனக் கூறினார்.

Views: - 23

0

0