தமிழகத்தில் இன்று மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு: உயிரிழப்பு ‘ஜீரோ’….56 பேர் டிஸ்சார்ஜ்..!!

Author: Aarthi Sivakumar
3 May 2022, 8:59 pm
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்று கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன் தின பாதிப்பான 47 மற்றும் நேற்றைய பாதிப்பான 40ஐ விட குறைவாகும். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 56 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், தமிழகதித்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என்ற அளவில் உள்ளது.

Views: - 184

0

0