அடுத்தாண்டு சந்திரயான் 3 விண்கலம் செலுத்த திட்டம்…! மத்திய அரசு தகவல்

30 June 2020, 9:39 pm
isro_gsat_updatenews360
Quick Share

டெல்லி: சந்திரயான் 3 விண்கலம் அடுத்தாண்டு செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதற்காக, ரஷ்யா, இஸ்ரோ  இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம். ஆகவே எச்சரிக்கையுடனும், துரிதமாகவும் பணிகள் இஸ்ரோவில் நடந்து வருகின்றன.

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் கொரோனாவால் பாதிக்கப்படாது. விண்வெளி பயணங்களின் திறன் மற்றும் வளங்களை மேம்படுத்துவதுடன் தனியார் விண்வெளி வீரர்களின்  பங்களிப்பு உதவும்.

சந்திரயான் 3 அடுத்த ஆண்டு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஒரு லேண்டர், ரோவர் மற்றும் ஒரு உந்துவிசை அமைப்பு  தொகுதிகளை நிலவுக்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என்று கூறினார்.