பெண்கள், எதிர்கட்சி தலைவர்களை திமுகவினர் இழிவுபடுத்தும் போது என்ன செய்தீர்கள்..? கிஷோர் கே.சுவாமியின் கைதுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்..!!!

14 June 2021, 11:07 am
kishor k swamy - gayathri rahuram - updatenews360
Quick Share

சென்னை : திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதள பிரபலம் கிஷோர் கே. சுவாமியை போலீசார் கைது செய்ததற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பேசியதாக திமுக ஐடி பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நேற்றி நள்ளிரவில் சமூக வலைத்தள பிரபலம் கிஷோர் கே. சுவாமியை கைது செய்தனர். பின்னர், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், தாம்பரம் கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கிஷோர் கே. சுவாமியின் கைது நடவடிக்கைக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திமுக தலைவர்களை விமர்சித்ததற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஜனநாயகம் எங்கே போனது? ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பிரதமர் குறித்து பொய் பேசியது, திருமாவளவன் இந்து தர்மம், பிராமணர்கள் மற்றும் பிரதமர் குறித்து அவதூறாக பேசும் போதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒட்டுமொத்த திமுகவினருமே குறிப்பிட்ட ஒரு சமுதாயமான பிராமணர்கள் குறித்து தவறாக பேசிவருகிறார்கள், தற்போது அவர்கள் தேவேந்திர குல வேலாளர்கள் குறித்து அவதூறாக பேசுகின்றனர். எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் ஏன் திமுகவினர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை? உள்ளதை கூறியதற்காக ஒருவர் கைது செய்யப்படுவது தான் ஜனநாயகமா?,” என தெரிவித்துள்ளார்.

Views: - 315

1

0