உங்களுக்காக இளைஞர் கூட்டமே காத்துக்கிட்டிருக்கு… முழு நேர அரசியலுக்கு வாங்க : உதயநிதிக்கு அமைச்சர் சேகர் பாபு அழைப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 8:49 pm
Sekar Babu Annamalai - Updatenews360
Quick Share

சென்னை துறைமுகம் பகுதி திமுக சார்பில் உடன் பிறப்பே எங்கள் உயிர்ச்சொல் என்னும் தலைப்பில் சுடரொளி நிகழ்ச்சி நடைபெற்றது.

பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 165 தையல் இயந்திரம், 70 லேப்டாப், 550 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை, 9 ஆட்டோக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெண்களுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, “முழு நேர அரசியலுக்கு உதயநிதி திரும்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பெரும் இளைஞர் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

சேப்பாக்கம்-திருவில்லிக்கேணி தொகுதி மட்டும் அல்ல; 234 சட்டமன்ற தொகுதியும் உங்கள் தொகுதி தான். ஆகவே இன்னும் வேகமாக நீங்கள் பயணிக்க வேண்டும்.” என்றார்.

Views: - 173

0

0