கேரளா போன்ற அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மக்களிடம் மருத்துவப் பரிசோதனை அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழக அரசு, கொரோனா உள்ளிட்ட புதிய தொற்றுநோய்ப் பரவலில் இருந்து மாநில மக்களைப் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய்ப் பரவல் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடுவது மட்டும் போதுமானதல்ல. காரணம் தமிழகத்தில் மட்டுமல்ல அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வைரஸ் தொற்று நோய்ப் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. அதாவது கடந்த காலங்களில் கொரோனா தொற்று நோயானது அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு பரவியது. எனவே முதலில் கேரளா போன்ற அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மக்களிடம் மருத்துவப் பரிசோதனை அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். எக்காரணத்திற்காகவும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சமரசம், தொய்வு, கால தாமதம் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது.
ஏற்கனவே கொரோனாவால் ஊரடங்கு, உயிரிழப்பு, பொருளாதார இழப்பு ஏற்பட்டதை அரசும், மக்களும் கவனத்தில் கொண்டு மீண்டும் அது போன்ற ஒரு துயரநிலை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு மக்களை கொண்டு செல்லக்கூடாது என்பதற்காக மருத்துவப் பரிசோதனைகள், பாதுகாப்பு அம்சங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஆகியவை எல்லாம் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கெல்லாம் தமிழக அரசும், அரசு இயந்திரமும் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டும். கொரோனா பரவல் தொடராமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் தேவை.
மிக முக்கியமாக கடந்த கால கொரோனா பாதிப்பை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, இனிமேலும் தமிழக மக்கள் கொரோனா போன்ற புதிய தொற்றுநோயினால் எவ்வித பாதிப்புக்கும் உட்படக்கூடாது என்பதற்காக கொரோனா உள்ளிட்ட புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்கவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.