‘இந்த வாரம் தங்கம் வாங்குதற்கான நேரம்’ : இன்றும் ரூ.224 சரிவு…!

13 August 2020, 3:35 pm
Gold-1-updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கிறது. இதனால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துவிட்டது.

இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. கடந்த இரு வாரத்திற்கும் மேலாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் 5வது நாளாக தங்கத்தின் விலை இன்றும் சரிந்துள்ளது. காலையில், கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து ரூ. 5,014 ஆக விற்பனையானது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.8 சரிந்து ரூ. 40,112க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலை சரிந்தே காணப்பட்டுள்ளது. அதாவது, கிராமுக்கு ரூ. 28 குறைந்து ரூ. 5,076 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.224 சரிந்து ரூ. 40,608க்கும் விற்பனையானது.

தொடர்ந்து, உச்சம் பெற்று வந்த தங்கம் விலை இன்றும் கிடுகிடுவென குறைந்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0