நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியளிக்கும் விலை நிலவரம் : இன்று மேலும் ரூ.360 குறைந்தது

25 August 2020, 10:53 am
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது.

வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டது. கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் குறைந்து மக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ. 4,958ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.360 சரிந்து ரூ. 39,584க்கும் விற்பனையாகியது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகமாக இருந்து வருவது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.