மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம், வெள்ளி : ‘ப்ப்பா’… ஒரே நாளில் இவ்வளவு உயர்வா..?

27 August 2020, 10:42 am
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை, மளமளவென குறைந்து வருகிறது.

கொரோனா சமயத்தில் தங்கம் வாங்க யாரும் முன்வராத நிலையில், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டது. கடந்த சில நாட்களாக எப்படி உயர்ந்தோ, அதே போல இறங்கி வந்தது. இதனால், தங்கம் மற்றும் வெள்ளி பிரியர்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர்.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.72 அதிகரித்து ரூ. 4,975ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.576 உயர்ந்து ரூ. 39,800க்கும் வர்த்தகமாகிறது. இதேபோல, சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,700 அதிகரித்து ரூ.72,500-க்கும், கிராம் வெள்ளியின் விலை ரூ.2.70 உயர்ந்து, ரூ.72.50 ஆக விற்பனையாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கம், வெள்ளியின் விலை இன்று பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.