நீட் தேர்வில் அரசு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1,615 மாணவர்கள் தேர்ச்சி : குவியும் பாராட்டு..!

17 October 2020, 6:15 pm
Neet 2020 - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் அரசின் இலவச பயிற்சி மையங்களில்பயிற்சி பெற்ற 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இளநிலை மருத்துவ படிப்பை பயில்வதற்கு நீட் என்னும் நுழைவுத்தேர்வை எழுதுவது கட்டாயமாகும். நாடு முழுவதும் கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை 14 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில்,தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அரசு மாதிரி பள்ளியில் பயின்ற ஜீவித்குமார் என்னும் மாணவர் 720 மதிப்பெண்களுக்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

கடந்த முறை அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், இந்த முறை 1,615 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6,692 மாணவர்களில், 738 அரசு பள்ளி மாணவர்களும், 877 அரசு உதவி பெறும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவையில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வாசுகி என்னும் மாணவி, 580 மாதிப்பெண்களும், காஞ்சிபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் 552 மதிப்பெண்களை பெற்று முதலிரண்டு இடங்களை பிடித்தள்ளனர்.

தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களில் 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 400-500 மதிப்பெண்களுக்குள் 15 பேரும், 300-400 மதிப்பெண்களுக்குள் 70 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 300க்கும் அதிகமான மதிப்பெண்களை 70 பேர் பெற்றுள்ளனர். இது கடந்த முறை 70 ஆக மட்டுமே உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் விதமாக, தமிழகம் முழுவதும் இலவச நீட் பயிற்சி மையம் தமிழக அரசினால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply