கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு..!!

18 April 2021, 7:31 pm
Plus-Two-exam - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. …

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

TN gvt - updatenews360

அப்போது, சிபிஎஸ்இ, 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தில் மே 5ம் தேதி முதல் 31 ம் தேதி வரை 12ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் கொரொனா 2ம் அலை அதிகரித்து வருவதாலும், மத்திய அரசின் தேர்வுகள் ஒத்திவைத்து இருப்பதால், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

cm wish - updatenews360

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதையடுத்து 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் செயல்முறை தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி/பல்கலை ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலை தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Views: - 25

0

0