பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு….!!

12 November 2020, 9:34 am
tn gvt - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ள்ளிகள் திறப்பு சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

9,10,11,12ஆம் வகுப்புகள் வரை பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16 முதல் செயல்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. முதுநிலை மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2ம் தேதி முதல் அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.

மேலும், டிசம்பர் 2ம் தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் எனவும், பிற கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளை ஆரம்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 100 நபர்களுக்கு மிகாமல் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமுதாய, பொழுதுபோக்கு, கலாச்சார, கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Views: - 43

0

0