ஆளுநர் விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் ஆகியோரை தொடர்ந்து ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் 3வது பாஜக நிர்வாகி இவராவார்.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், எதிர்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, நேற்று விருதுநகரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அதாவது, ஆளுநர் பதவி என்பது பாஜக தலைவர்களுக்கு ஆறுதல் பரிசு போல் ஆகிவிட்டதாகவும், பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது, எனவே தான் இங்கு உள்ள பாஜக தலைவர்களுக்கு ஆளுநர் பதவி தருவதாக கூறினார். மேலும், ஆளுநர் பதவிக்கு பாஜக தலைவர்களைத் தவிர தமிழ்நாட்டில் வேறு தகுதியானவர்கள் யாரும் இல்லையா?, என்றும் கேள்வி எழுப்பினார்.
அவரது இந்தப் பேச்சு பாஜகவினரிடையே கொதிப்படையச் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் ஒரு காலமும் பாஜகவால் காலூன்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டு, ஆளுநர் பதவியை தமிழக பாஜகவினருக்கு ஆறுதல் பரிசை போன்று வழங்குகிறார்கள் என்று சிபிஎம் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
2 சீட்டுக்கு பத்து கோடி பிச்சையெடுத்து பெற்றுக்கொண்ட அடிமைகள், ஆறுதல் பரிசு, காலூன்ற முடியாது என்றெல்லாம் புலம்புவது கேலிக்கூத்து. இந்தியாவில் கம்மிகளை, கம்யூனிசத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து கட்டியது பாஜக என்பதே வரலாறு, எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.