‘தீவிரவாதியை அனுப்பி கொல்வோம்’ ; ஆளுநரை மிரட்டிய திமுக பேச்சாளர்.. காவல்துறையிடம் சென்ற பரபரப்பு புகார்!!

Author: Babu Lakshmanan
14 January 2023, 10:13 am
Quick Share

ஆளுநருக்கு மிரட்டல் விடுத்து பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை – விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் திமுக பிரமுகரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்என் ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரை, தகாத வார்த்தைகளை சொல்லி அசிங்க அசிங்கமாக திட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக அரசு எழுதி கொடுத்ததை முழுமையாக படிக்காத ஆளுநரை தகாத வார்த்தையில் பேசியும், அவரை செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக பேசினார். தொடர்ந்து, அம்பேத்கர் பெயரை சொல்லாத அவரை, ஜம்மு காஷ்மீருக்கு சென்று விடலாம் என்றும், அங்கு தீவிரவாதிகளை அனுப்பி கொல்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், தனது பதவியை பாதியிலேயே ராஜினிமா செய்து வந்த அண்ணாமலை எனக் கூறி அசிங்கமான வார்த்தையில் விமர்சித்த திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பிரான்ஸ்ல தயாரித்த கடிகாரத்தை கட்டிக்கொள்வதுதான் தேசபக்தியாடா..? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், வாரிசு அரசியல் குறித்து பேசினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு ஆண்மை இருப்பதால் வாரிசு அரசியல் நடத்துவதாகவும், ஆண்மை இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு கிண்டலாக குறிப்பிட்டார்.

அதோடு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அதிமுக குற்றம்சாட்டி வருவது குறித்து பேசிய அவர், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கேளியாக குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் எப்போது நடந்தது என்று சொல்லும் யோகிதை இருக்கிறதா..? என அதிமுகவுக்கு கேள்வி எழுப்பினார்.

கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் பேசுவது சர்ச்சையாகி வந்த நிலையில், தற்போது திமுக நிர்வாகியின் நாகரீகமற்ற பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநர் குறித்து அவதூறு பேசியதோடு, மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Views: - 156

0

0