முதலமைச்சர் பழனிசாமியை இன்று மாலை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்..!!

19 October 2020, 1:28 pm
TN Governor- Updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவரது தாயின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க இருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் ஆகிய ஊர்களுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

சிலுவம்பாளையத்தில் தனது தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை முடித்துக்கொண்டு, நேற்று இரவு 9.20 மணியளவில் சென்னை வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது, முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செல்கிறார். அங்கு முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாளின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் அவர், முதலமைச்சருக்கு ஆறுதல் கூற இருக்கிறார்.

Views: - 13

0

0