சென்னை தனியார் மருத்துவமனையில் ஆளுநர் புரோகித் அட்மிட்..! கொரோனா பரிசோதனை..?

2 August 2020, 11:50 am
governor- updatenews360
Quick Share

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி வருகிறது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரையும் இந்த கொரோனா தாக்கியது. இந் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா உறுதியானது.

அதன் காரணமாக மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ஜூலை 28ம் தேதி முதல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக அவர் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

Views: - 12

0

0