ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா..! தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை அறிவிப்பு

2 August 2020, 6:09 pm
Banwarilal Purohit-updatenews360
Quick Share

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையி உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  பல மணி நேர மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அவர் மாலை ராஜ்பவன் திரும்பினார்.

இந் நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த தகவலை  மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றையும் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம், ஆளுநர் மாளிகையில் தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் புரோகித் தனிமைப்படுத்தலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0