குரூப் 1- முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு ஜன.,3ம் தேதி நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By: Babu
1 October 2020, 7:42 pm
Quick Share

சென்னை : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட குரூப் 1- முதல்நிலை தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசின் காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை குரூப் தேர்வுகளின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், 2019-20 ஆம் ஆண்டுக்ககான பணி நியமனத்திற்கான தேர்வு கடந்த செப்.,1ம் நடைபெற்றது. அவர்களின் மதிப்பின் விபரங்களும் 12ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை கொரோனா தொற்று அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதியில் இருந்தும், , சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் மாதம் 28ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 – முதல்நிலை தேர்வு 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 51

0

0