பிப்ரவரியில் பள்ளிகளை திறப்பது உறுதி? தேர்வுகள் நடத்த திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan26 ஜனவரி 2022, 11:26 காலை
சென்னை : 10,11,12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘10,11,12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளோம். பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும். பொது தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.’ என தெரிவித்துள்ளார்.
1
0