அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும், திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் குறித்து வேலூரைச் சேர்ந்த திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகனுக்கும், குடியாத்தம் குமரனுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் குடியாத்தம் குமரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அந்தக் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனையும், அவரின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த்தையும் விமர்சித்துப் பேசிய தனது முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது :- என்னை செருப்பால் அடித்தாலும் எனது கட்சி திமுக தான். என்னுடைய தலைவர் ஸ்டாலின் தான், என்னுடைய வருங்கால தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான். இதை நான் எதிர்த்து கேட்டதால் என் மீது கோபமடைந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் கைது செய்ய போலீசுக்கு வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார் கதிர் ஆனந்த். எனது தாயார் புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். எனது தந்ைத பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் வீட்டிற்கு வந்து யாரும் எங்களை சந்திக்கக் கூடாது என்றும் எங்களுக்கு நிதி உதவி செய்யக்கூடாது என்றும் கட்சியினருக்கு கதிர் ஆனந்த் கட்டளையிட்டு இருக்கிறார். நேற்று இரவு 115 மணிக்கு போலீஸ் எனக்கு போன் செய்து, எம்பி உங்களை கைது செய்யச் சொல்லியிருக்காரு. குடும்பத்தோட எங்காவது போயிடுங்க என்று எச்சரித்தனர். நாங்கள் எங்கேயும் போக மாட்டோம்.
சில நாட்களுக்கு முன் எனக்கு போன் செய்த கதிர் ஆனந்த் எம்பி, ‘நீ இளைஞரணி மாநாட்ல பேச மாட்டே என்று எச்சரித்தார். அவர் சொன்னது போலவே இன்று நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டேன். அமைச்சர் உதயநிதி குறித்து எல்லாம் எவ்வளவு கேவலமாக கதிர் ஆனந்த் பேசி வருகிறார் தெரியுமா?
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உடல்நலம் இல்லாத நிலையில் கூட கடுமையாக கட்சி பணியும் மக்கள் பணியும் ஆற்றி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைத்தால் தொடர்ந்து சினிமாவில் நடித்து சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அவர் கொள்கைக்காக தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார். தலைவர் குடும்பம் கட்சிக்காக இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இங்கே அமைச்சர் துரைமுருகன் குடும்பம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறது.
துரைமுருகனின் தம்பி சிங்காரம் ஒரு பக்கம் மகன் கதிர் ஆனந்த் ஒரு பக்கம் என்று குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சர் பி டி ஆர் குரலில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்து விட்ட தாக எவனோ ஒருவன் பொய்யான ஆடியோவை வெளியிட்டான். ஆனால் உண்மையில் மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் 60,000 கோடி சம்பாதித்து இருக்கிறார். இது பற்றிய உண்மைகளை விரைவில் நான் வெளியிடுவேன். துரைமுருகனின் பல வீடியோக்கள், தொலைபேசி உரையாடல்கள் பதிவுகள் என்னிடம் உள்ளன. அவற்றையெல்லாம் நான் வெளியிட்டால் பத்து நிமிடத்தில் துரைமுருகனுக்கு மந்திரி பதவி இருக்காது, என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.