வங்கக்கடலில் வலுப்பெறுகிறது ‘குலாப்’ புயல்: புதுச்சேரி-காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு!!

Author: Aarthi Sivakumar
25 September 2021, 12:36 pm
Quick Share

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் குலாப் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் கணித்திருக்கிறது.

புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் குலாப் புயல் ஒடிசா – வடக்கு ஆந்திரா இடையே 26ம் தேதி மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் என்ற பெயர் வைக்கப்படுகிறது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Views: - 101

0

0