வெள்ளை அறிக்கை இல்லை… மஞ்சள் கடுதாசி…!! தொடரப்போகும் கஜானா காலி : எச்.ராஜா, கமல்ஹாசன் விமர்சனம்…!!
Author: Babu Lakshmanan10 August 2021, 7:29 pm
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து பாஜக பிரமுகர் எச்.ராஜா மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகால நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை சென்னையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். அப்போது, அவர் கூறியிருப்பதாவது :- நடப்பு நிதி ஆண்டின் இடைக்கால நிதிநிலை மதிப்பீடுகளின்படி தமிழகத்தின் மொத்த கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது.
வணிக வரியில் இருந்து வரும் வருமானம் 4.19% குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 %ஆக சரிந்துள்ளது. வெளிநாடுகளில் வரி அதிகமாக விதிக்கப்படுவதால் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2014க்கு பிறகு மின்சார கட்டணமும் உயர்த்தப்படாமல் இருக்கிறது. அதேபோல, பல ஆண்டுகளாக சொத்து வரியையும் உயர்ந்தவில்லை, எனக் கூறினார்.
அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளை அறிக்கையை மஞ்சள் கடுதாசி என விமர்சித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்,” கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், “நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?,” எனத் தெரிவித்துள்ளார்.
1
0