அதிமுகவினர் மீது வழக்கு போடும் திமுக… கட்சி தாவிய செந்தில்பாலாஜி, சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? எச். ராஜா கேள்வி..!!

Author: Babu Lakshmanan
11 January 2022, 2:43 pm
Quick Share

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு வரும் நிலையில், அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த தற்போதைய அமைச்சர்கள் மீது ஏன் வழக்குகள் போடப்படவில்லை கரூரில் பாஜக தேசிய நிர்வாகி எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்ட பாஜக சார்பில், பஞ்சாப் அரசினை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியினை கண்டித்தும், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூர் பாண்டியனை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகி எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது :- தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருகிறது. முக்கியமாக காவல்துறையை ஏவல் துறையாக, திமுக அரசு பயன்படுத்தி வருகிறது. மேலும், மு.க.ஸ்டாலின் நல்ல ஒரு மனிதர், இருப்பினும் பஞ்சாப் சம்பவத்தில் பிரதமர் மோடி அவமதிப்பு குறித்து, பல்வேறு மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை.

அவரும், பாரதப் பிரதமர் நரேந்திரமோடி என்பதை அவர் மறந்துவிட்டார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் காந்தி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் என்னையும் கண்டனம் தெரிவிக்க அழைத்தனர். இங்குள்ள முதல்வர் தமிழகத்திற்கு முதல்வர், ஆனால் பாரத பிரதமர் இந்தியாவிற்கு பிரதமர் ஆவார்.

Cm stalin -Updatenews360

மேலும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் அதிகளவில், அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று வருகிறது. 4 1/4 வருடங்கள் மட்டுமே இது செல்லும், பின்பு குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், நீதி விசாரணைக்குள் வருவார்கள். இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் தற்போது அதிகரித்து வருகிறது, எனக் குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அரசையும், காங்கிரஸ் கட்சியையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியையும், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய நிர்வாகி எச்.ராஜா கூறியதாவது :- தற்போது பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொங்கல் கிப்ட் பொருட்களில் சுத்தம் இல்லாததையும், வெல்லம் உருகி விட்டது, சுகாதாரமற்ற பொருட்களே விநியோகம் செய்யப்படுகிறது. புளி பாக்கெட்டில் பல்லி இருக்கிறது.

dmk mla sekar babu 2- updatenews360

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யும் தமிழக அரசு, அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்து, தற்போது உள்ள திமுகவின் அமைச்சர்களாக உள்ள செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு மீது மட்டும் இன்னும் விசாரணையை ஏதும் தொடராமல் இருக்கிறது.

திமுக முக்கிய நிர்வாகியான வீரபாண்டி ராஜா, அவர் மரணம் அடைவதற்கு முன்பு, நானும் அதிமுகவிற்கு சென்று வந்தாலாவது, திமுகவில் மரியாதையும் பதவியும் கிடைக்குமா ? என்று கேள்வி எழுப்பியது ஞாபகத்திற்கு வருகிறது. அதேபோல் அரசியல் இருமுனை கத்திகள், எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்பும், 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிக்குவார்கள், என்று தெரிவித்தார்.

Views: - 316

0

0