கனிமொழியையும் அழைத்து விசாரியுங்க : ‘நீங்க இந்தியனா..?’ விவகாரத்தில் எச்.ராஜா டுவிட்..!

10 August 2020, 6:19 pm
H raja 1 - updatenews360
Quick Share

சென்னை : விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி எதிர்கொண்ட சம்பவம் குறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க., எம்.பி. கனிமொழி நேற்று பரபரப்பு தகவலை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். அதாவது, விமான நிலையத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், உங்களுக்கு இந்தி தெரியுமா..? எனக் கேள்வி கேட்டதாகவும், அதற்கு தெரியாது என பதிலளித்ததால், நீங்க இந்தியரா..? என அவர் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு கனிமொழிக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் கருத்துக்களை கூறி வந்தனர்.

அந்த வகையில், சகோதரரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் விடுத்த டுவிட்டர் பதிவில், “இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார்.

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!, எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா கருத்து வெளியிட்டிருப்பதாவது, “
முதலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. CISF விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது கனிமொழி அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும். திக, திமுக வின் கருப்பர் கூட்ட கயமைக்கு எதிராக ஏற்பட்டுள்ள இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சியாகவும் இது இருக்கலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 33

0

0